மக்கள் அடித்து விரட்டினாலும் பணிகளை திறம்படச் செய்ய வேண்டும்! – ஜனாதிபதி

kotta 1

மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும் சமாளித்துக்கொண்டு உங்கள் பணிகளைத் திறம்படச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நச்சுப் பொருட்கள் அற்ற உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு உள்ள உரிமை, அரசின் கொள்கைத் திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது எனவும் அவர் கூறினார்.

சேதன உரப் பாவனையை ஊக்குவிக்கும் அரசின் திட்டத்துக்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.