வேகமாக பரவும் அல்பா வைரஸ் திரிபு நாட்டின் 9 இடங்களில் அடையாளம்!

கொரோனா வைரஸ் 350x250 1
கொரோனா வைரஸ் 350x250 1

பிரித்தானியாவின் கென்ட் மாநிலத்தில் பரவி வரும் பி.1.1.7 வைரஸ் திரிபு நாட்டின் பல பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, ஹபராதுவ, மாத்தறை, கராபிட்டிய மற்றும் றாகமை ஆகிய பகுதிகளில் பிரித்தானிய வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது குறித்த அறிக்கை இன்று (10) முற்பகல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.