எண்ணெய் மூலம் எஞ்சிய பணத்தை மக்களுக்காக பயன்படுத்துங்கள்-ரணில்

download 29
download 29

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 30 டொலராக காணப்பட்ட போது அரசாங்கத்திற்கு 2 பில்லியன் டொலர் மிகுதியாகியது. இதனை கொண்டு நெருக்கடியான நிலையில் மக்களுக்கு உதவுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அவர் தொடந்தும் கூறுகையில்,

கொவிட் – 19 வைரஸ் அனைத்து நாடுகளிலும் வியாபிக்க ஆரம்பித்த நாள் முதல் கடந்த மே மாதம் வரையிலும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை படிப்படியாக குறைந்து வந்தது.

உலக சந்தையில் காணப்பட்ட மசகு எண்ணெய் விலை 2019 நல்லாட்சி அரசாங்கம் காணப்பட்ட போதிருந்த உயர்ந்த புள்ளியில் இன்று இல்லை. எனவே எஞ்சிய 2 பில்லியன் டொலரை கொண்டு நெருக்கடியான நிலையில் மக்களுக்கு உதவ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எரிபொருளின் விலையை அரசாங்கம் மிக மோசமாக அதிகரித்துள்ளதுடன், 2015 ஆண்டிற்கு முன்னர் காணப்பட்ட விலையை போன்று அதிகரித்துள்ளது. இதனை மக்கள் நல நோக்காக கருத முடியாது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 30 டொலராக காணப்பட்ட போது அரசாங்கத்திற்கு 2 பில்லியன் டொலர் மிகுதியாகியது.

இந்த தொகையை கொண்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எரிப்பொருள் அல்லது மருந்துகளை கொள்வனவு செய்ய கூடிய ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். வவுசர் முறைமையை அறிமுகம் செய்வதன் ஊடாக இதனை சிறப்புற செய்யலாம் என தெரிவித்தார்.