கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை முட்டாள்தனமானது – ரணில்

முழு அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியினராகிய சஜித் அணியால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் காணப்படும் கருத்து வேறுபாட்டை தீர்க்க அரசுக்கும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான், எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், யாருக்கு எதிராகவும் இந்த நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கமாட்டேன். இது படுமுட்டாள்தனமான பிரேரணையாகும்.

இது, அரசுக்கும் இருக்கும் உதய கம்மன்பிலவுக்கும் மாற்று சக்தியினருக்கும்இடையிலான முரண்பாடுகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கையாகும்” – என்றார்.