இலங்கையில் எப்பகுதியும் தனிமைப்படுத்தலின் கீழ் இல்லை – ஷவேந்திர சில்வா

1585485791Shavendra Silva
1585485791Shavendra Silva

இலங்கையில் தற்போது எந்தவொரு பகுதியும் தனிமைப்படுத்தலின் கீழ் இல்லை என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்து யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு கிராமசேவகர் பிரிவு நேற்று விடுவிக்கப்பட்டது.

இதனை அடுத்து தற்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவரது பெயரில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.