நிதி அமைச்சர் – 6 நாடுகளின் தூதுவர்களுக்கு இடையில் சந்திப்பு

pasil
pasil

சலுகை முறையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இலங்கைக்கு வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில், ஆராயப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் தமது ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஜப்பானிய தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.