ஊரடங்கிலும் வீதி அபிவிருத்தி முன்னெடுக்கப்படும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

625.500.560.350.160.300.053.800.900.160.90 24 1

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பெருந்தெருக்கள் மற்றும் ஏனைய வீதிகளின் அபிவிருத்தி பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது.

எனினும், இது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களில் தாக்கம் செலுத்தாது.

வீதி அபிவிருத்தித் திட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களின் உத்தியோகப்பூர்வ அடையாள அட்டையை காண்பித்து எந்தவித தடையும் இன்றி தங்களது பணியிடங்களுக்குத் திரும்ப முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மத்திய அதிவேக நெடுஞ்சாலை, புதிய களனி பாலத்திட்டம், 5000 கிராமியப் பாலங்கள் மற்றும் 1 இலட்சம் கிலோமீற்றர் தூரத்திற்கான வீதி அபிவிருத்தி என்பன தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.