இலங்கையின் உறுதியான – நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும்

Jey shankar new
Jey shankar new

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் தொலை காணொளி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் என்பதை மீள உறுதிப்படுத்துவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் முதலீட்டு திட்டங்கள் மற்றும் கடன் வசதிகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்காக ஏனைய உலக நாடுகளின் முயற்சிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.