கட்டுவன் – மயிலிட்டி வீதிக்கு அங்கஜன் கள விஜயம்

1643190385 angajan 2 1
1643190385 angajan 2 1

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் கட்டுவன் – மயிலிட்டி வீதியின், விடுவிக்கப்பட்ட 400 மீற்றர் வீதியை பார்வையிடும் கள விஜயமொன்றை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் மேற்கொண்டார்.

இதன்போது, “பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்பச்செயற்பாடாக இவ்வீதி விடுவிப்பை கருத வேண்டியது அவசியமானதாகும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விஜயத்தின்போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ, வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.