இ.தொ.காவின் தீர்மானத்தை விமர்சித்த சுமந்திரன்

m.a.sumanthiran 1 800x445 1
m.a.sumanthiran 1 800x445 1

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விமர்சித்துள்ளார்.

ராஜபக்‌ஷ அரசாங்கத்துடனான 15 ஆண்டு கால உறவு முறிந்துவிட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இது தொடர்பில் யாழப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாகவே ஜீவன் தொண்டமான் இவ்வாறானதொரு தீரமானத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.