கோட்டாபய இலங்கை வரும் திகதியை உதயங்க அறிவித்தார்!

Gotabya Rajapaksha 2
1641000023 Gotabya Rajapaksha 2

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.

சிங்கப்பூரில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கடந்த 11ஆம் திகதி தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மனிதாபிமான அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ  தனது நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தற்காலிகமாக தங்கியிருக்க முடியும் எனவும் தாய்லாந்து பிரதமர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மக்களின் எதிர்ப்பு காரணமாக ஜூலை 13 ஆம் திகதி மாலைதீவுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து சிங்கப்பூருக்கும், பின்னர்  தாய்லாந்துக்கும் சென்றார்.