வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடம்!

302432539 1800705830277162 250901694343493770 n
302432539 1800705830277162 250901694343493770 n

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் இரு மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளனர்.

விஞ்ஞான பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சி.கஞானன் மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும், பீ.டெக் பிரிவில் 2ஏ,பி சித்திகளை பெற்று யு.கிங்சிலி மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

மேலும், வெளியான முடிவுகளின் அடிப்படையில் பிரிவுகள் ரீதியாக முதல் 10 நிலைகளுக்குள் தெரிவாகிய மாணவர்களின் விபரத்தினை பாடசாலை அதிபர் வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில்,

விஞ்ஞானப்பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று ப.அருள்நேச சர்மா  மாவட்ட ரீதியில் 3வது இடத்தினையும், 3 ஏ சித்திகளை பெற்று சி.விதுசன் மாவட்ட ரீதியில் 5வது இடத்தினையும், 2ஏபி சித்திகளை பெற்று இ.மதுமிதன் மாவட்ட ரீதியில் 6வது இடத்தினையும், 2ஏ பி சித்திகளை பெற்று சி.திவ்வியா மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும், 2ஏ பி சித்திகளை பெற்று இ.கிசாலினி மாவட்ட ரீதியில் 10வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சே.யதீஸ் மாவட்ட ரீதியில் 4வது இடத்தினையும், 3ஏ சித்திகளை பெற்று து.தயானந்தன் மாவட்ட ரீதியில் 5வது இடத்தினையும், 3ஏ சித்திகளை பெற்று வி.ஜோக் பிரவீன் மாவட்ட ரீதியில் 6வது இடத்தினையும், 3ஏ சித்திகளை பெற்று ஜெ.சிவசுதன் மாவட்ட ரீதியில் 7வது இடத்தினையும் , 2ஏ பி சித்திகளை பெற்று மோ.யாகவன் மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும், 2ஏ பி சித்திகளை பெற்று அ.சன்சில்ராஜ் மாவட்ட ரீதியில் 9வது இடத்தினையும், 2ஏ பி சித்திகளை பெற்று மு.கிசோத்மன் மாவட்ட ரீதியில் 10வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

தொழிநுட்ப பிரிவில் (பிடெக்) ஏபிஎஸ் சித்தியினை பெற்று பா.யூட் டெனிஸ்ரன் மாவட்ட ரீதியில் 6வது இடத்தினையும், தொழிநுட்ப பிரிவில் (ஈடெக்) 2ஏ சி சித்தியினை பெற்று மொ.மபாஸ மலிக்  மாவட்ட ரீதியில் 2வது இடத்தினையும், 2ஏ சி சித்தியினை பெற்று கி.குணநீதன் மாவட்ட ரீதியில் 3வது இடத்தினையும், 2ஏ எஸ் சித்தியினை பெற்று வி.குணசீலன் மாவட்ட ரீதியில் 10வது இடத்தினையும், வர்த்தக பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று ச.கிசாத் மாவட்ட ரீதியில் 9வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன், ஏனைய மாணவர்களும் திறமை சித்தியினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.