மாவட்டத்தில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவிக்கி கிடைத்த கௌரவம்

vav student 13
vav student 13

வவுனியா மாவட்டத்தில் க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

vav student 12

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய அதிபர் ச.சுபாஸ்கரன் தலைமையில் இன்று (15) பாடசாலையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா மாவட்டத்தில் புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி ரா.லுவின்சிகா மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்றிருந்தார்.

vav student 2

இதனையடுத்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து குறித்த மாணவியை கௌரவித்திருந்தனர். இதன் போது ஈச்சங்குளம் பிரதான வீதியில் இருந்து பான்ட் வாத்தியத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு பாடசாலை வளாகத்திற்குள் மாணவி அழைத்து வரப்பட்டதுடன், மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்று மாணவிக்கு பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

vav student 3

இந்நிகழ்வில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபகர் சிவபாதம் கணேஸ்குமார், வவுனியா வடக்கு கல்விக் கோட்ட அதிகாரி சசிக்குமார், வவுனியா வடக்கு வணிக பாட ஆசிரிய ஆலோசகர் பாக்கியநாதன், செட்டிகுளம் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார். சாதனை மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.