இராஜாங்க அமைச்சரை கைது செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்!

Sanath Nishantha mp
Sanath Nishantha mp

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னதாக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் முன்னிலையாகியிருக்கவில்லை என நீதிமன்றத்திற்கான தெரிவிக்கப்படுகிறது

இதனையடுத்து, அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுத் தொடர்பில் தண்டிக்கப்படாமல் தவிர்ப்பதற்கான காரணங்களை சமர்பிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.