இன்றிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் குறைகிறது!

desel
desel

இன்று (17) இரவு 9 மணிமுதல் அமுலாகும் வகையில் எரிபொருட்கள் விலை குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம். தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒக்டென்  92 ரக பெற்றோலின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 370 ரூபாவாகும்.

லங்கா ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 415 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், ஒக்டென் 95 பெற்றோல், சுப்பர் டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.