வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து :10பேர் காயம்!

IMG 20221124 WA0013
IMG 20221124 WA0013

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (24) காலை பேருந்து டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

IMG 20221124 WA0008


இன்று (24) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

IMG 20221124 WA0025


இவ்விபத்தில் டிப்பர் வாகன சாரதி உட்பட பேருந்தில் பயணித்த பயணிகளும் காயமடைந்த நிலையில் 6பேர் மாங்குளம் மற்றும் 4பேர் வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

IMG 20221124 WA0025 1


இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.