தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று கொழும்பில் சந்திப்பு

r sampanthan
r sampanthan

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில், கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

முன்னதாக குறித்த கூட்டம் கடந்த 15ம் திகதி இடம்பெறவிருந்தது.

எனினும் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, தமிழ் கட்சிகள் குறித்த கூட்டத்தினை புறக்கணித்தன.

இந்தநிலையில், சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னரே இன்றைய தினம் சந்திக்க தீர்மானித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் செய்திச் சேவை ஒன்றிற்கு தெரிவித்தார்.