5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது லங்கா சதொச

1670994534 1670992105 sathosa L
1670994534 1670992105 sathosa L

இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

கோதுமை மா ஒரு கிலோகிராம் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 250 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 460 ரூபாவாகும்.

அவ்வாறே, ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.

அதேவேளை உள்ளூர் டின் மீன் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 490 ரூபாவாகும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.