வவுனியாவில் தமிழர் விடுதலை கூட்டணியில் போட்டியிட பகிரங்க அழைப்பு!

E5C71BF3 7053 48A8 B386 074DA5A0DDC1 1
E5C71BF3 7053 48A8 B386 074DA5A0DDC1 1

வவுனியாவின் அபிவிருத்தியினை நோக்காக கொண்டு தமிழர் விடுதலை கூட்டணி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகியுள்ளது என கூட்டணியின் நிர்வாக செயலாளரும் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான க. சபேசன் தெரிவித்துள்ளார். 


தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறுக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
உள்ளூராட்சி மன்ற தேர்தல் அபிவிருத்திகளை நோக்கமாக கொண்டது. உள்ளூராட்சி சபைகள் மூலமே கிராம மட்ட மற்றும் நகர மட்ட அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன. 


இவ்வாறான நிலையில் வவுனியாவின் அபிவிருத்தி பாதையில் உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலை கூட்டணியோடு இணைந்து பயணிக்க ஆர்வமுள்ளோரை தமிழர் விடுதலை கூட்டணியில் இணையுமாறு பகிரங்க அழைப்பு விடுகிறது. 
தமிழர் விடுதலை கூட்டணியின் பதில் நிர்வாக செயலாளரும், இளைஞர் அணியின் தலைவரும், வவுனியா மாவாட்ட அமைப்பாளருமான க.சபேசனை வேட்பாளர்கள் தொடர்புகொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை கையளிக்க முடியும். 


தமிழர் விடுதலை கூட்டணி கட்சிக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான விண்ணப்ப படிவங்களை வவுனியா மாவட்ட தேர்தல் செயலகத்தில்  பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதீல் கட்டுப்பணம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறன நிலையில் வேட்பாளர்கள் தெரிவு இடம்பெற்று வருகிறது.  வவுனியா மாநகரசபை மற்றும் ஏனைய பிரேதச சபைகளில் போட்டியிட தயார் நிலையிலுள்ளவர்கள் 077 99 99 020 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

கடந்த கால அரசியல் பாதையிலிருந்து விலகி வவுனியா மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தனியான புதிய பாதையில் பயணிக்கும் என்பதனை  உறுதி செய்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.