நுவரெலியாவில் கோர விபத்து: 7 பேர் பலி – 53 பேர் காயம்!

1674235439 1674233355 acc L
1674235439 1674233355 acc L

நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் “சமர் செட்” பகுதியில் பேருந்தொன்று, வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துள்ளாகினதில் எழுவர் பலியாகியுள்ளனர். மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து நேற்று (20) வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது.

விபத்தில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும், விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவருமாக 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்று நானுஓயாகாவற்துறையினர் தெரிவித்தனர்.

வேனில் பயணம் செய்த இரு ஆண்களும், ஒரு பெண்ணும் மூன்று சிறார்களும் மற்றும் முச்சக்கரவண்டி சாரதியுமே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்துள்ள பாடசாலை மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.