ஜனாதிபதியின் பதவிக் காலம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாற்றம் இல்லை!

20 amendment
20 amendment

19 ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என்பதுடன், இரு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்றும் கூறுகின்றது.

இந்நிலையில், அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகின்றது.

இதேவேளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படாது என்றும் தெரிய வருகின்றது.

2015 இல் ‘நல்லாட்சி’ அரசாங்கம் 19 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக 20 ஆவது திருத்தச் சட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த விரும்புகிறது. இந்நிலையில், இந்த 3 விடயங்கள் தவிர 19 ஆவது திருத்தத்தின் ஏனைய அம்சங்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ மாற்றப்படும் என்று தெரிகிறது.

20 ஆவது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததும் ஒரு வாரத்துக்குள் நாடாளுமன்றின் அங்கீகாரத்தை பெறப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.