விக்கியை கைது செய்வோம் என்போரின் கூச்சல் வேடிக்கையானது – சீ.வீ.கே. சிவஞானம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 4
625.500.560.350.160.300.053.800.900.160.90 4

விக்னேஸ்வரன் புதிதாக எதனையும் கூறவில்லை. வரலாற்றைத்தான் கூறுகிறார். அதை வைத்துக் கொண்டு விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும் – அவரது கடவுச் சீட்டைப் பறிக்க வேண்டும் என்று அச்சுறுத்துவது வேடிக்கையானது.

– இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம்.

உண்மையை கூறிய விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம்

தமிழர்களுடைய வரலாற்று உண்மையை கூறிய விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் – சி.வி.கே.சிவஞானம்

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Freitag, 4. September 2020

அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தமிழர்கள் வாடகை வீட்டில் குடியிருப்பதை மறக்கக்கூடாது” என்று கிழக்கு தொல்லியல் செயலணியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்த கருத்துத் தொடர்பில் கூறுகையிலேயே சீ.வீ.கே. இதனைக் கூறினார்.

நேற்று தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தவை வருமாறு,

தமிழர்களின் பூர்வீகங்கள், இந்து ஆலயங்கள் உலகம் பூராகவும் – இலங்கை பூராகவும்  பரவிக் கிடக்கின்றன. அதிலும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் நிறைந்து கிடக்கின்றன. வரலாற்று கல்வெட்டுக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. இதனைவிட 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஜே. ஆர். ஜெயவர்த்தன – ராஜீவ் காந்தி ஒப்பந்தத்திலே வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு அரசாங்கங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எல்லாவல மேதானந்த தேரரை விட ஆயிரம் மடங்கு வரலாறு தெரிந்தவர் ஜே. ஆர். ஜெயவர்த்தன. அவரே இதனை ஏற்றுக் கொண்டிருந்தார். வரலாற்று ரீதியாக – ஆவண ரீதியாக இந்த மண்ணிலேயே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்குஆதாரங்கள் உள்ளன. இதனைவிட வேறு எந்தஆவணம் வேண்டும் இந்த மேதானந்த தேரருக்கு.

இது ஏற்கனவே எப்போதுமே நான் பேசிக் கொண்டு இருக்கின்ற ஒரு விடயம். இதனையே விக்னேஸ்வரனும் தனது உரையில் தெரிவித்திருக்கின்றார். அவர் புதிதாக எதையும் இறக்குமதி செய்து கூறவில்லை அவர் வரலாற்றையே தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது, “நாங்கள் கெட்டிக்காரர்கள்”, ”சிங்கள ஏகாதிபத்தியம்”, “சிங்கள மேலாதிக்கம்”, “ஒரு மொழி; ஒரு இனம்”, “வாடகைவீட்டில் குடியிருப்போர்”, என்று பல்வேறுபட்ட கருத்துகளை தென்னிலங்கையில் தெரிவித்து வருகின்றார்கள். வரலாற்று ரீதியாக நாங்கள்தான் பூர்வீக குடிகள் அது பெரிய விடயமுமில்லை.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக சிங்களவர்களும்  தமிழர்களும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நான் பெரிது; நீ பெரிது என்று இல்லாமல்  நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வரலாற்று ரீதியாக அவர்களும் வாழ்ந்திருக்கின்றார்கள். அதை வைத்துக் கொண்டு, “விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்”, “அவரது கடவுச்சீட்டைப் பறிக்க வேண்டும்”, என்று அச்சுறுத்தல் விடுவது வேடிக்கையான விசயமாகவே உள்ளது – என்றார்.