கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

5 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 907ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை  3 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் இன்னும் 192 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.