திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு நடைபயணம்!

20200906 121611
20200906 121611

இளைஞர்களுடைய செயல்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் கி.கிருஸ்னமேனன் கேரிக்கை விடுத்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு இடம்பெறப்போகும் நடைபவணி குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கிருஸ்னமேனனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பும் போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

இளைஞர்களான எங்களுக்குள் எந்தவிதமான பிரிவினைகளும் முரன்பாருகளும் இல்லை எனவும், அவ்வாறு இருந்தாலும் தாங்கள் தேசியத்துக்கான ஒரு விடையம் வரும் போது ஒற்றுமையான செயல்பாடுகளையே மேற்கொண்டு வந்துள்ளோம்.

இளைஞர்களாகிய எங்களுடைய செயல்பாடுகளை பார்த்து தலைவர்கள் தாங்களும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்தால்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வினையோ அல்லது ஏனைய விடையங்களையோ பேசமுடியும் என்ற ரீதியில் உணர்வாக இருந்தால் நிச்சயமாக அது சாத்தியமாகும்.

எதிர்காலத்தில் ஒரு ஒற்றுமையான பயணத்தினை மேற்கொள்ளுவதற்கு இது ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கும். தியாக திபம் திலீபனின் 33 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபி வரை நடைபயணம் ஒன்று இடம்பெற இருக்கின்றது.

குறித்த நடைபயனம் தமிழர் தாயக பொது அமைப்புகள், மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற இருக்கின்றது.

எதிர்வரும் 21 ஆம் திகதி முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இருந்து ஆரம்பமாகும் குறித்த நடைபவணி 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சென்றடைய இருக்கின்றது.

இடம்பெற இருக்கின்ற நடைபவணியில் தாங்களும் கலந்துகொள்ள போவதாக இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் க.பிருந்தாபன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் கி.கிருஸ்னமேனன் ஆகியோர் இன்று தெரிவித்துள்ளனர்.