சம்பந்தன் – மாவை திடீர் சந்திப்பு!

1 15
1 15

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா சந்தித்து பேசியுள்ளார்.

திருகோணமலையில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து வெளிவரவில்லை. எனினும், கட்சி சம்பந்தப்பட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது எடுக்கப்படவுள்ள ஒழுக்காற்று விசாரணை குறித்தும் பேசப்பட்டன என்று தெரிய வருகின்றது.