முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை தொடர்பில் ஆளுனருடன் கலந்துரையாடல்

27

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை குறைபாடுகள் தொடர்பாக மாஞ்சோலை வைத்தியசாலை அபிவிருத்தி குழு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சகிதம் வடமாகாண ஆளுனரை இன்று(திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் ஆளுனருக்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனை செவிமடுத்து ஆளுனர் பிரச்சனைக்கு உரிய தீர்வை தான் பெற்று தருவதாக  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்திருந்ததாக செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.