தொழில்துறையின் வீழ்ச்சிக்கான காரணிகளை உடனடியாக அடையாளம் காணுமாறு ஜனாதிபதி உத்தரவு!

Sagara 4296 1068x712 1 1
Sagara 4296 1068x712 1 1

இலங்கையின் தொழில்துறையின் வீழ்ச்சிக்கான காரணிகளை உடனடியாக அடையாளம் காண்பதுடன், உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு காணப்பட்ட கேள்வியை மீண்டும் அதிகரிப்பதை இலக்காகக் கொண்டுசெயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலை தோட்டங்களை அண்மித்த பகுதியில் பயிர்ச்செய்கை முன்னெடுத்தல், தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயமாக்கல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு தொடர்பிலான இராஜாங்க அமைச்சின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (07) கலந்துரையாடப்பட்டது.

இதன்போதே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ இந்தவிடயத்தினைமுன்வைத்துள்ளார் அதேவேளை அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி பின்னடைவுக்குள்ளாகியுள்ள தேயிலைதொழில்த்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதே சமயம்இந்த தொழிற் துறையில் நட்டம் ஏற்படுவதற்கான காரணிகளை அடையாளம் கண்டு குறுகிய காலத்தில் அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.