தமிழர்கள் குறித்து அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு என்ன? சரத் வீரசேகர கேள்வி

www
www

வடமாகாணத்தின் முக்கிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் இன்னொரு போருக்கு தயாராக உள்ளனர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்மபலம் ஆகியோர் இன்னமும் பிரிவினைவாதக் கொள்கையில் உள்ளனர்எனவும் அவர்களின் பாணியிலே அவர்களுக்கு ராஜபக்ச படைகளாகிய நாமும் பதிலடி கொடுக்க தயாராகவே இருக்கிறோம் .

“தமிழர்களின் தேவை சுயநிர்ணய ஆட்சி என்றால் வடக்கு , கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியில் வாழும் தமிழர்கள் குறித்து தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு என்ன?

சிங்களப் பகுதிகளில் உள்ள தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்றா கூற வருகின்றனர்? சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் இதனையா எதிர்பார்கின்றனர்? முதலில் இந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் தெரிவிக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற திமிருடன் இம்மூவரும் செயற்பட்டு வருகின்றனர் . அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாமே அவர்களைத் மாற்ற வேண்டிவரும். அது எந்த வழியில் என்பது அவர்களின் செயற்பாடுகளில் தான் தங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .