தாயக கோட்பாடு பற்றி முதன் முதலாக உரையாற்றியவர் விக்னேஸ்வரனே- மனுஷ நாணயக்கார

cm
cm

தாயக கோட்பாட்டை வெளிப்படுத்தி நாடாளுமன்றத்தில் முதன் முதலாக உரையாற்றியவர் விக்னேஸ்வரனே. இது மக்கள் மத்தியில் தவறான கருத்தையும், சிந்தனையும் ஏற்படுத்திவிடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் மொழியானது இந்த நாட்டின் ஆதிக்குடிகளின் மொழி என்றும் இந்த நாடு தமிழ் ஆதிக்குடிகளின் தாயகம் என்று கூறிய க.வி விக்கினேஸ்வரன், தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டை தனது உரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த கூற்று பிரிவினையை அடிப்படையாக கொண்டது. அதனாலேயே நான் அவருடைய உரைக்கு எதிர்ப்புக்களை வெளியிட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டேன். அதனாலேயே சபையில் பகிரங்கமாக எதிர்ப்புக்களை தெரிவித்ததோடு ஹன்சார்ட்டிலும் அவருடைய உரையை நீக்குமாறு கோரினேன்.

மேலும் இத்தனை காலத்தில் தமிழ்த் தலைவர்கள் எவரும் நாடாளுமன்றத்தில் உரையாற்றவில்லை. முதன்முதலாக அவர் இவ்வாறு செயற்பட்டுள்ளார் என மேலும் தெரிவித்துள்ளார்.