சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியம் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி! 20ம் திருத்தத்துக்கும் கடும் எதிர்ப்பு

j
j

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முன்னெடுக்கும் ஒரு சில செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன.”

– இவ்வாறு சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர இன்று தெரிவித்தார்.

தவறுகளை ராஜபக்ச அரசு உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பல்வேறு எதிர்பார்ப்புக்களை கொண்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால், இந்த அரசு தற்போது முன்னெடுக்கும் ஒரு சில செயற்பாடுகள் அதிருப்தியளிப்பவையாக அமைகின்றன. குறிப்பாக அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் குறிப்பிட வேண்டும்.

நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் பொருந்தும் விதத்தில் அரசமைப்பைத் திருத்தம் செய்ய வேண்டுமே தவிர இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்களுக்குச் சாதகமாக அமையும் விதத்தில் ஏற்பாடுகள் கொண்டுவரக் கூடாது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய பல விடயங்கள் காணப்பட்டாலும், புறக்கணிக்கும் பல ஏற்பாடுகளும் காணப்படுகின்றன” – என்றார்………………