20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராயும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு வரவேற்பு

thamil
thamil

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதைப் பிற்போடுவதற்கும் அதன் உள்ளடக்கங்களை விரிவாக ஆராய்வதற்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியிருக்கிறது.

வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித தேரரினால் உருவாக்கப்பட்ட நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காண்பிக்கப்படக்கூடாது என்றும், அதுகுறித்து மக்கள் மத்தியில் விரிவான கலந்துரையாடலொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் அவ்வமைப்பின் செயலாளர் பாலித லிஹினியகுமாரவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.