வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு தேவை -எம்.கே சிவாஜிலிங்கம்

sivaji
sivaji

தமிழர்களுக்கான நிலையான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டதொடரில் வலியுறுத்தவுள்ளதாக தமிழ் தேசியத் கட்சியின் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் ஆரம்பமான ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுச்சபையிலும் 10 அமர்வுகளிலும் இதனை வலியுறுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த முறை நடைபெறும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உண்மை நீதி இழப்பீடு மற்றும் மீள் இடம்பெறாமையை உறுதி செய்வதற்கான விசேட அறிக்கையாளர் பப்ளோ டீ. கிரிப் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.