20 ஆவது திருத்தம் ஊடாக முழு அதிகாரமும் கோட்டாவுக்கு -பீரிஸ்

625.500.560.350.160.300.053.800.900.160.90 8 2
625.500.560.350.160.300.053.800.900.160.90 8 2

அரச பொறிமுறைக்கு அவசியமான உடனடி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டும். அதற்கமையவே 20ஆவது திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.”என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியே மக்களுக்குப் பொறுப்பானவர். அதனால்தான் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குகின்றது.

20ஆவது திருத்தம் காரணமாக ஜனநாயகம் பாதிக்கப்படும் என்ற எதிரணியினரின் கருத்தை நிராகரிக்கின்றேன்.

அரச பொறிமுறைக்கு அவசியமான உடனடி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டும். அதற்கமையவே 20ஆவது திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு முழுமையான அனைத்தையும் உள்ளடக்கிய புதிய அரசமைப்பே அவசியமாகும். அனைத்து விடயங்களையும் தெளிவாக ஆராய்ந்த பின்னரே புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளா்.