அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீா்மானம்!

c7ae3aa0 07791511 cdad0134 110e6eea tna 1600x600 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
c7ae3aa0 07791511 cdad0134 110e6eea tna 1600x600 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

வடகிழக்கு மாகாணங்களில் புதிய அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீா்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக கூறியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதிா்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்து இந்த தீா்மானம் எடுக்கப்படும் என அறிவித்திருக்கின்றது.

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட வடகிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக அரசாங்கம் பொலிஸாாின் ஊடாக செயற்படுத்தும் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகள் குறித்து இன்று பிற்பகல் நல்லுாா் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது.

குறித்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீா்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது,

கலந்துரையாடலில் மாவை சோ.சேனாதிராஜா, த.சித்தாா்த்தன், சீ.வி.கே.சிவஞானம், சி.சிறீதரன், ஈ.சரவணபவன் பா.கஜதீபன், எஸ்.ஈசன், விந்தன் கனகரட்ணம், எஸ்.வேந்தன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டிருந்தனா்.