20 இல் திருத்தத்துக்கு இடமில்லை – அரசு உறுதி

Untitled 1 25
Untitled 1 25

20 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் எந்த ஒரு திருத்தத்தையும் செய்யாது. அதை வடிவமைத்த 9 பேர் கொண்ட குழுவின் விவாதத்தின் போது மட்டும் இணைப்புகளை செய்யும் என்று அரசின் உயர் வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

20 ஆவது திருத்தத்தை வரைந்த குழு தனது அறிக்யை நேற்று மகிந்த ராஜபக்சவிடம் சமர்ப்பித்தது.

இதை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயல்கிறது.

20 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்தால், சுயாதீன ஆணைக்குழுக்கள், பாராளுமன்ற பொதுச் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு நியமனங்களை பரிந்துரைக்கும் அரசமைப்பு சபையை இது நீக்கும். அத்துடன் அதன் முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு மீண்டும் செல்லும்.

20 ஆவது திருத்தத்தின் சில விதிகளுக்கு எதிராக அரசாங்க தரப்புக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குழு விவாதம் ஒன்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது.