ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச் சபை அமர்வு!

202006200639573349 Chinas Reply When Asked About Indias Big Support At UN SECVPF
202006200639573349 Chinas Reply When Asked About Indias Big Support At UN SECVPF

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச்சபை அமர்வு நேற்று நியுயோர்க் நகரில் ஆரம்பமானது.

எதிர்காலச் சவால்களை வெற்றி கொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்த அமர்வின் தலைவர் வொல்க் பொஸ்கிர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக கொவிட்-19 போன்ற தொற்று நிலைமையில் இந்த எண்ணம் மிகவும் பலமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பல்நோக்கு செயல் திட்டமொன்று அவசியம் .என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்த மாநாடு கடும் சட்டங்களுக்கு அமைய இடம்பெறுகிறது. இதனால், பல உலகத் தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை. உலகத் தலைவர்கள் வீடியோ தொழில்நுட்பம் மூலம் இந்த அமர்வில் உரையாற்ற உள்ளனர்.