குறைக்கப்பட்ட நிறைவேற்று அதிகார முறைக்கு ஆதரவு – சஜித்

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 3 1

அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிறைவேற்று அதிகார முறைக்கு ஆதரவளிப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

“ஆரம்பத்தில் நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை உறுதியாக ஆதரித்தவன் எனினும் 2014 முதல் 2015 வரை இடம்பெற்ற விடயங்கள் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்ட ஜனாதிபதி முறையை விரும்பத் தொடங்கினேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தின் மூன்று தூண்களும் ஒன்றை மற்றொன்று பலவீனப்படுத்த முயலாத முறையை நாங்கள் உருவாக்க முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தேவையேற்படும் போது காங்கிரஸ் செனெட் ஜனாதிபதி ஆகியோர் ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கான சிறந்த உதாரணம் அமெரிக்கா எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.