இன்று மீண்டும் தமிழ் கட்சிகள் ஒன்றுகூடுகின்றன!

hgr 696x338 1
hgr 696x338 1

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை அனுட்டிப்பதில் தடைகளை ஏற்றுபடுத்தும் அரசின் முயற்சிகளை கைவிடக் கோரி, ஒன்று திரண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் இன்றைய தினம் சந்திக்கின்றனர்.

திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை யாழ் நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பளிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில், இன்று திட்டமிட்டபடி யாழ்பாணத்தில் தமிழ் கட்சிகள் ஒன்று கூடுகின்றன.

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின்அழைப்பின் பேரில் கடந்த 18.09.2020 அன்று இடம் பெற்ற தமிழ்த் தேசியக் கொள்கையின்பாற் பற்று கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம் பெற்றிருந்த போதிலும் அதில் தமக்கு முறையாக அழைப்பு கிடைக்கவில்லை எனக்கோரி குறித்த கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமல் தவித்திருந்த போதிலும் 19..09.2020 தியாகி திலீபன் அவர்களை நினைவு கூறுவது தமிழர்களின் உரிமை அதை தடை செய்ய வேண்டாம் என இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்திட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மீண்டும் அவசரமாக கலந்துரையாடுவதற்க்காக அனைத்து தமிழ் கட்சிகளும் இன்று மீண்டும் ஒன்றுகூடவுள்ளன இதேவேளை இன்றைய கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது .