20 இற்கு ஆதரவானவர்கள் குப்பைத் தொட்டியில் போடப்படுவார்கள் – லக்ஷமன் கிரியெல்ல

6a5eac3ffbd44ab4bde4c0ccf32ae0ea XL
6a5eac3ffbd44ab4bde4c0ccf32ae0ea XL

20 இற்கு ஆதரவானவர்கள் குப்பைத் தொட்டியில் போடப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (23) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாம் தேர்தல்களில் தோல்வியடைந்தாலும் ஒரு கொள்கையின் கீழ்தான் இதுவரை பயணித்துக்கொண்டிருக்கிறோம். அரசாங்கத் தரப்புக்குத்தான் ஒரு கொள்கையொன்று இல்லை. காலத்துக்குக் காலம் அவர்களின் கொள்கை மாறிக்கொண்டே செல்கிறது.

20இன் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாது செய்யப்பட்டால் நாம் மீண்டும் பின்நோக்கி நகரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு உள்ளாவோம்.

20இற்கு ஆதரவளிப்பது என்பது எதிர்கால சந்ததியினரை காட்டிக்கொடுப்பது போன்றதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.