இந்தியப் பெருங்கடலை அமைதி மண்டலமாக முன்மொழிந்த முதல் நாடு இலங்கை-ஜனாதிபதி

download 4 2
download 4 2

இந்தியப் பெருங்கடலை அமைதி மண்டலமாக முன்மொழிந்த முதல் நாடு இலங்கை என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,

சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலை அமைதி மண்டலமாக முன்மொழிந்த முதல் நாடு இலங்கையாகும். இலங்கை ஒவ்வொரு நாட்டிலும் நட்புடன்தான் உள்ளது.

இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய சீனா முன்வந்தது. எங்கள் இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் சிலர் இந்த உறவை கடன் பொறி என்று அழைத்த போதிலும், அது பெரும் அபிவிருத்தி திறன் கொண்ட ஒரு திட்டமாகும்.

மேலும் இலங்கை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்திருக்கிறது. இந்தியப் பெருங்கடல் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திரமான மண்டலமாக இருக்க வேண்டும். பரஸ்பர நன்மை பயக்கும் வளர்ச்சி ஒத்துழைப்புக்கு எங்களுக்கே முதலிடம் என மேலும் தெரிவித்துள்ளார்.