மினுவாங்கொட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,307 அதிகரிப்பு!

1 11
1 11

மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,307 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் புதிதாக 121 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 87 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தும் 34 பேர் மினுவாங்கொட கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அடுத்து இந்நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை , 4752 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் 1, 432 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.