மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – வெளியான புதிய தகவல் !

RL8n Jhk
RL8n Jhk

நடைபெற உள்ள மாகாணசபை தேர்தலில் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தாய் கட்சியான தமிழசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்டு வந்த தமிழ்ஈழ விடுதலை இயக்கம் இம்முறை மாகாணசபை தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது

இதேவேளை தமிழ்ஈழ விடுதலை இயக்கம் எந்த சின்னத்தில் போட்டியிடவுள்ளது யார் யாரை மாகாண சபை தேர்தலில் களமிறக்கவுள்ளதுஎன்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

அதே சமயம் குறித்த செய்தியினை உறுதிப்படுத்துவதற்காக எமது செய்திப்பிரிவுதமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொள்ள முயற்சித்த பொழுதும் அது பயனளிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.