ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகுமாறு மைத்திரிக்கு அழைப்பு!

52681348 president commission of inquiry 850
52681348 president commission of inquiry 850

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 17ம் திகதி மீண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று மூன்றாவது முறையாகவும் சாட்சியம் வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அவர் முன்னிலையாகியிருந்தார்.

இதன் போது அவரிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரம சிங்க ஆகியோரது தலைமையிலான அரசாங்கம் ஆட்சி வகித்த போது நாட்டில் உள்ள கிறிஸ்தவ மதத்தலங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் என்பன மீது கடந்த வருடம் சித்திரை மாதம் 21 திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த தக்குதலில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் , மற்றும் முதியவர்கள் , ஆண்கள் என பலரும் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.