ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்காக ஆஜராகமாட்டோம் மூத்த சட்டத்தரணிகள்அதிரடி !

top lawyers
top lawyers

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாக தாம் நீதிமன்றில் ஆஜராக மாட்டோம் என மூத்த சட்டத்தரணிகள் சிலர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

கடந்த (12) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு, முறிப்புப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் தேக்குமரங்கள் கடத்தப்படுவதையடுத்து குறித்த இடத்திற்கு நேரில் சென்று உண்மையை உலகுக்கு வெளிப்படுத்த முயன்ற ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இருவரும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் கடத்தல் செயற்பாட்டில் ஈடுபட்ட கும்பலால் தாக்கப்பட்டிருந்தனர் .

குறித்த சம்பவமானது பெரிதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நோர்வே பிரஜை ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலுமிருவரை காவல்துறை தேடிவருகின்றது இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று (16) நீதிமன்றில்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ள நிலையில் கடத்தல் காரர்கள் சார்பில் தாம்எந்த காரணத்துக்காகவும் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டோம் என மூத்த சட்டத்தரணிகள் சிலர் கூட்டாக அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை குறித்த கடத்தல் காரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு மூத்த சட்டத்தரணிகள் சிலரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளததாகவும் ஆனால்அவற்றைதாம் நிராகரித்துள்ளதாகவும் பிரபல சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.