விக்கினேஸ்வரனை திடீரென சந்தித்தார் மாவை சேனாதிராஜா !

mavai vikki
mavai vikki
தமிழரசுக் கட்சியின் தலைவரும் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் ,நீதியரசர் விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்று (18) இரவு 7.30 மணியளவில் யாழ் நல்லூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க .வி விக்னேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது .
இந்த சந்திப்பில் யாழ்ப்பாணம் – நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (17) தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடி கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலின் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் 20வது சீர் திருத்தத்தில் தமிழ்கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்

அதேவேளை கடந்த கால தமிழ் அரசியல் பரப்பில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் இவ்வாறு சந்தித்து பேசியிருப்பது மாற்றம் ஒன்றைப் பிரதிபலிப்பதாகவே கருதப்படுகின்றது.