இலங்கையில் கொரோனா தொற்றுக்கான ஆபத்து கூடிய இடங்கள்!

இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்கான ஆபத்து கூடிய இடங்கள் பற்றிய விபரங்களை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் மருத்துவ அதிகாரிகளின் வகையீட்டுக்கு அமைய, கடந்த 14 நாட்களில் பதிவான தகவல்கள் தொடர்பிலான விபரங்களின் அடிப்படையில் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு நோயாளிகளை அனுப்பி வைத்தல் என்பனவற்றின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளவை அதி ஆபத்து வாய்ந்த பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.