வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம்

நாட்டில் கொரோனா தொற்று வலுவடைந்துள்ள நிலையில் வட மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை சுகாதார நடைமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் சால்ஸ் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

குறித்த ஒன்றுகூடல் இன்று (26)வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

குறித்த கூட்டத்திற்கு வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதிகள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், உள்பளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.