நாட்டு மக்களுக்கு பிரதி காவல்துறை மா அதிபர் விடுக்கும் அவசர வேண்டுகோள்!

Screenshot 20201028 142302 UC Mini
Screenshot 20201028 142302 UC Mini

நாட்டில் அடுத்து வரும் மூன்று நாட்கள் சவாலாக அமையவுள்ளதென காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் இன்று காலை 8மணிமுதல் இரவு 10 மணிவரை அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும். ஒன்று கூடல்களை தவிர்த்து செயற்பட வேண்டும்.

குறிப்பாக உற்சவாங்களில் பங்பேற்பது திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வது சுற்றுலாக்கள் மேற்கொள்வது போன்ற விடயங்களை தவிரத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பாக நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்கள் தீர்மானிக்கதாக அமையவுள்ளது.

எனவே ஊரடங்கு அமுலில் இல்லாத பகுதிகளில் உள்ள மக்கள் உட்பட அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்” எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.