தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படையாக கொண்டது- இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி!

Hanaa.Singer
Hanaa.Singer

உயிரிழந்த உடல்களின் தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படியாக கொண்டவை என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளரும், ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பது தொடர்பில் இலங்கையில் தற்போது பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஹனா சிங்கர் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில்,

தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பவவுவதைத் தடுக்க, அந்த சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம் ஆதாரங்களால் நிருபணமாகவில்லை. அதற்கு பதிலாக தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படையாக கொண்டவை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.