தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்: ஜனாதிபதி கலந்துரையாடல்

kotta 1

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் குறித்த நாளாந்த நிலைமை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது சுகாதார அதிகாரிகளிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் கிடைத்ததும் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் தளர்த்தப்படும் என்றும் அறிய முடிகின்றது.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க வீட்டுக்குள்ளேயே தங்குமாறும் இராணுவ தளபதி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சட்டவிரோத பொதுக் கூட்டங்கள் மற்றும் மக்கள் நடமாட்டங்களை கண்காணிக்க ட்ரோன் மூலமான கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 12 காவல்துறை பிரிவுகளைத் தவிர, இன்று முதல் கோட்டை, புறக்கோட்டை, மருதானை, டாம் வீதி, கொம்பனித் தெரு உள்ளிட்ட பகுதிகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 3,500 ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.